Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் நடந்த உலக அழகி போட்டி.. பட்டம் வென்ற அழகி எந்த நாட்டை சேர்ந்தவர்?

Siva
ஞாயிறு, 10 மார்ச் 2024 (07:30 IST)
இந்தியாவில் நடந்த 71 ஆவது உலக அழகி போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்பவர் உலக அழகி பட்டத்தை வென்றார். அவருக்கு  2021 ஆம் ஆண்டு உலக அழகியான கரோலினா மகுடம் சூட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இந்த அழகி போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அழகி போட்டி இந்தியாவில் மீண்டும் நடைபெற்ற நிலையில் மும்பையில் உலக அழகி போட்டியின் இறுதிப்போட்டி நேற்று 9) நடந்தது.

இந்த இறுதிப்போட்டியில் 71 வது உலக அழகியாக செக் குடியரசு நாட்டை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 2024 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.  

இந்தியா உள்பட 117 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில் இறுதி போட்டிக்கு இந்தியாவின் சினி ஷெட்டி என்ற அழகி உள்பட 14 அழகிகள் தேர்வு பெற்றிருந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments