Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவியாளர் மூலம் செருப்பை கழற்றிய கேரள சபாநாயகர் சக்தன்: பெரும் சர்ச்சை

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2015 (05:55 IST)
உதவியாளர் மூலம் தனது செருப்பை கேரள சபாநாயகர் சக்தன் கழற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

 
கேரளாவில் நெல் அறுவடை குறித்த ஒரு நிகழ்ச்சி கேரள சட்டசபை வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அம்மாநில விவசாய அமைச்சர் கே.பி.மோகனந், மற்றும்  கேரளா சபாநாயகர்  சக்தன் ஆகியோர் கலந்து கொண்டார்.
 
அப்போது, சபநாயகர் சக்தன் கால்களில் இருந்து அவரது உதவியாளர் செருப்பை கழற்றிவிட்டார். இந்த வீடியோ காட்சி  உள்ளூர் சேனல்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சர்ச்சைக்கு வழிவகுத்தது.
 
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள சபாநாயகர் சக்தன், "எனக்கு உடல் நலபாதிப்பு உள்ளது. இதனால், என்னை குனியக் கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதை அறிந்து கொண்ட எனது உதவியாளர் மனிதாபிமான முறையில் எனக்கு உதவி செய்துள்ளார்.  நானாக, எனது செருப்பைக் கழற்றுமாறு உதவியாளருக்கு உத்தரவிடவில்லை என தெரிவித்துள்ளார்.
 
இருப்பினும் இதை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கேரள சபாநயாகர் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவில், அம்மாநில அமைச்சர் பங்கஜா முண்டே ஒரு விழாவில் கலந்து கொண்ட போது, அவரது செறுப்பை பாதுகாவலர் கழற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.
 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments