Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேயிலை தோட்டத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! – கேரளாவில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (11:07 IST)
கேரளாவில் தேயிலை தோட்டத்தில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சந்தன்புரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்ப்பதற்காக மேற்குவங்கத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களது 15 வயது சிறுமியுடன் வந்துள்ளனர்.

அங்குள்ள தேயிலை தோட்டத்தை சுற்றி பார்ப்பதற்காக சிறுமி தனது நண்பருடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் 4 பேர் சிறுமியின் நண்பரை தாக்கிவிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

சிறுமியின் நண்பன் சத்தம் போடவே அருகில் இருந்த தொழிலாளர்கள் வந்ததால் குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் 4தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர். அதில் இருவர் சிறுவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்