Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் எகிறும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 24,296 பேர் பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (19:07 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் படிப்படியாக அதிகரித்து வருவது அம்மாநில மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 
 
கேரளாவில் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வரும் நிலையில் பாதிப்பு சிறிதும் குறையவில்லை என்பது மட்டுமின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,296  என்றும் கொரோனாவால் ஒரே நாளில் பலியானவர்களின் எண்ணிக்கை 173 என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 19,349 என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அம்மாநில மக்களை மட்டுமின்றி அண்டை மாநில மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments