Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெஜ்ரிவால் ஊரில் இல்லை: ஆம் ஆத்மி கட்சியினர் பஞ்சாப் வேட்பாளர்களை அறிவித்து அதிரடி

கெஜ்ரிவால் ஊரில் இல்லை: ஆம் ஆத்மி கட்சியினர் பஞ்சாப் வேட்பாளர்களை அறிவித்து அதிரடி

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (16:11 IST)
பஞ்சாப் மாநிலத்தில், அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி என்ற ஒரே இலக்கோடு ஆம் ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, மற்ற கட்சிக்கு முன்பு முந்தி கொண்டு முதல் கட்டமாக ஆம் ஆத்மி கட்சி 19 வேட்பாளரை அறிவித்துள்ளது.


 


பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து ஜூன் மாதம் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த, முன்னாள் எம்.பி. மோகன் சிங், பெரோஸிப்பூர் தொகுதியில் பேட்டியிடுகிறார். இவருக்கு தலித்துகளின் ஆதரவு அதிகம் உள்ளது. மூத்த வழக்கறிஞர் ஹெச் எஸ் பூல்கா டாகா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர். மூத்த வழக்கறிஞர் ஷெர்கில் எஸ்எஸ் நகர் மொஹாலியில் போட்டியிடுகிறார். ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லாத போதே, வேட்பாளரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அனைவரும் வியப்பில் ஆழ்தியுள்ளது. தற்போது, அவர் ஒரு விபாசனா யோகா வகுப்பிற்காக மாராட்டிய மாநிலம் நாக்பூரில் இருக்கிறார் என்பது கூறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments