Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே ஆகியோரின் பதவியை பாஜக பறிக்கவேண்டும்: கெஜ்ரிவால் வலியுறுத்தல்

Webdunia
புதன், 24 ஜூன் 2015 (16:46 IST)
லலித் மோடிக்கு உதவிய சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரின் பதவியை பாஜக பறிக்கவேண்டும் என்று  அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
 
இது தொடர்பாக முதல்வர்  கெஜ்ரிவால் விளக்கம் தர வேண்டும் என்ற கோரிக்கையை மாநில சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தி, நேற்று அமளியில் ஈடுபட்டனர்.
 
அப்போது முதல்வர்  கெஜ்ரிவால் பேசுகையில், ‘ நாங்கள் டோமரை பதவி நீக்கம் செய்தது போன்று, பிரதமரும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்களை நீக்க வேண்டும். நான் ஜிதேந்தர் டோமர் மீது நடவடிக்கை எடுத்தது போன்று பிரதமரும் சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே சிந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments