Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்துவா சிறுமி பலாத்காரம்: 6 பேர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (12:51 IST)
கத்துவா சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என அறிவித்து பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இந்த கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை பஞ்சாப் பதான்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட் 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. 
கைதான சிறுவனின் வயது தொடர்பான மனு மீதான விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அவனை தவிர்த்து மீதம் 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வெளியாகியுள்ளது. 
 
கத்துவா சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய நிலையில், பிற்பகல் 2 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்