Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை: திமுக கருத்தால் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (07:01 IST)
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370 நீக்கப்பட்டதற்கு அம்மாநில மக்களே அதனை ஏற்றுக்கொண்டு இயல்பு வாழ்க்கையை தொடங்கிவிட்டனர். இதுவரை காஷ்மீரில் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடந்ததாக தகவல் இல்லை. உலகிலேயே இந்த விவகாரத்தால் அதிகம் ஆத்திரம் அடைந்தது பாகிஸ்தான் மட்டுமே
 
இந்த நிலையில் திமுகவை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் வட இந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் கலந்து கொண்டபோது 'காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை' என்று கூறியுள்ளார். இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தான் கூறிய அதே கருத்தை திமுகவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளதை முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டு தனது அதிர்ச்சியை தெரிவித்ததோடு, முக ஸ்டாலின் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
காஷ்மீர் சென்று அம்மாநில மக்களுடன் திமுக தலைவரோ அல்லது அவரது பிரதிநிதியோ கலந்தாலோசித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்ட பின்னர் திமுக இந்த விஷயத்தில் ஒரு முடிவெடுக்கலாம் என்றும், காஷ்மீர் மக்கள் மனதில் என்ன உள்ளது என்பது தெரியாமலே வடகோடியில் உள்ள ஒரு மாநிலத்தின் பிரச்சனையை தென்கோடியில் உள்ள ஒரு மாநிலத்தின் தலைவர்கள் கருத்து கூறுவது சரியா? என்பதே பல நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments