Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும்: அண்டை மாநில துணை முதல்வர் அறிவிப்பு

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (12:31 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன என்பதும் வரும் டிசம்பர் வரை பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என சமீபத்தில் மத்திய உயர்கல்வி செயலாளர் தெரிவித்திருந்தார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
அக்டோபர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பதற்கு கர்நாடக மாநில அரசு தயாராகி வருவதாகவும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்றும் அம்மாநில துணை முதல்வரும் உயர்கல்வித் துறை அமைச்சருமான அஸ்வத் நாராயணன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்த கல்வி ஆண்டு தொடங்கியதும், இளங்கலை, பொறியியல், பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் திட்டமிடப்பட்டு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கல்லூரிகள் திறப்பது குறித்து எந்தவித அறிவிப்பையும் தெரிவிக்காத நிலையில் கர்நாடக மாநில அரசு அக்டோபர் 1 முதல் கல்லூரிகள் திறக்கும் எனக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்.. 5 பெண்கள் உயிரிழப்பு..

சென்னை அருகே அம்மா உணவகத்தில் சீலிங் இடிந்து விழுந்ததால் பரபரப்பு... பெண் காயம்

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments