Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலுக்கும் அழைப்பு – மோடியின் அரசியல் காய்நகர்த்தலா ?

Webdunia
திங்கள், 27 மே 2019 (14:38 IST)
தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினியை அடுத்து கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி வரும் 30 ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார்.

மிக விமரிசையாக நடக்க இருக்கும் இந்த பதவியேற்பு விழாவில் பல தேசிய தலைவர்கள் மற்றும் சர்வதேசத் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்தவிழாவில் கலந்துகொள்ள நடிகரும் மோடியின் நண்பருமான ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கமலும் ரஜுனியும்  பாஜகவின் பி டீம் என அழைக்கப்பட்டு வரும் வேளையில் இந்த அழைப்பு அந்த சந்தேகங்களுக்கு தூபம் போடுவது போல உள்ளது. ஆனால் ரஜினியும் , கமலும் இதுவரை விழாவிற்கு செல்வது குறித்து பதில் எதுவும் சொல்லவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments