Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மாட்டு சாண சிப் கதிரியக்கத்திலிருந்து காக்கும்! – காமதேனு ஆயோக் தலைவர்!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (15:52 IST)
மாட்டு சாணத்தால் செய்யப்பட்டுள்ள தகடுகள் கதிரியக்கத்தை கட்டுப்படுத்துவதாக காமதேனு ஆயோக் தலைவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கால்நடை அமைச்சகத்தின் கீழ் உள்ள ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் பசுக்களை பராமரித்தல், பசுக்கள் சார்ந்த பொருட்களை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பண்டிகை காலம் தொடங்குவதால் பசு மாட்டு சாண தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் ”காமதேனு தீபாவளி அபியான்” திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாட்டு சாண சிப் ஒன்றை அறிமுகப்படுத்தி பேசிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கதிரியா “மாட்டு சாணம் கதிரியக்கத்திலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் திறன் கொண்டது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கௌசத்வா சவாச் என்னும் இந்த மாட்டு சாண சிப் மூலமாக செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களின் கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments