Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெசேஜ், கால், இண்டர்நெட் முடங்கியது.. என்ன ஆச்சு ஜியோ சேவைக்கு?

Siva
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (17:19 IST)
இன்று இந்தியாவின் பல பகுதிகளில் ஜியோ டெலிகாம் சேவையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மும்பை போன்ற முக்கியமான நகரங்களில், ஜியோ சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், பிற பகுதிகளிலும் ஜியோ சேவை செயலிழந்துள்ளது, இதனால் பலருக்கும் மொபைல் சேவைகள் கிடைக்கவில்லை. நெட்வொர்க் சேவைகளை பயன்படுத்துவது, கால் செய்வது, மெசேஜ் அனுப்புவது, போன்ற அடிப்படை சேவைகள் கூட கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஜியோவின் சேவைத்தடை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து டெக் நிறுவனமான "டவுன் டிடெக்டர்" கூறியபோது, "மும்பை மற்றும் சில பிற பிராந்தியங்களில் ஜியோ சேவையில் மிகப்பெரிய முடக்கம் ஏற்பட்டுள்ளன. ஜியோ செயலி கூட வேலை செய்யவில்லை. மும்பை முழுவதும் ஜியோ மொபைல் சேவைகள் முடங்கியுள்ளன. சமீப காலங்களில் ஏற்பட்ட மிகப் பெரிய சேவை தடையாக இது கருதப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments