Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மீதான ஜாமீன் வழக்கு முடிவுக்கு வந்தது - உச்ச நீதி மன்றம் உத்தரவு

Webdunia
சனி, 11 ஜூலை 2015 (00:46 IST)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான ஜாமின் வழக்கை உச்ச நீதி மன்றம் முடித்து வைத்தது.
 
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலருமைச்சருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
 
இதனையடுத்து, பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்திரவிட்டது.
 
சிறப்பு நீதி மன்ற தண்டனையை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார்.
 
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமின் மனு மீதான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதால், அவர்களின் ஜாமின் மனுக்கள் முடித்து வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
 
ஆனால், ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசும், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தேர்தல் ரிசல்ட் நெருங்கி வரும் நிலையில் இன்றைய பங்குச்சந்தை நிலை என்ன?

பிளஸ் 2 விடைத்தாள் நகலை எப்போது பதிவிறக்கம் செய்யலாம்? முக்கிய அறிவிப்பு..!

பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள்: சான்றிதழ் சரிபாா்க்கும் தேதி அறிவிப்பு..!

நாகா்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலை தினமும் இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை.!

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து! என்ன காரணம்?

Show comments