Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எப் 15: 100வது ராக்கெட்டில் சாதனை செய்த இஸ்ரோ..!

Siva
புதன், 29 ஜனவரி 2025 (07:57 IST)
இஸ்ரோ தனது 100வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து இன்று விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்15 என்ற ராக்கெட் வெற்றிகரமாக செயல்பட்டது.

இந்த ராக்கெட்டுக்கான இறுதி கட்ட பணி நேற்று அதிகாலை தொடங்கிய நிலையில், தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயல்பாடுகள் இஸ்ரோ அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வந்தது. என்.பி.எஸ் 02 செயற்கைக்கோள் இந்த ராக்கெட்டால் சுமந்து செல்லப்பட்ட நிலையில், புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

இஸ்ரோவுக்கு கிடைத்த இந்த வெற்றி, இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமலுக்கு வந்த புதிய வன்கொடுமை தண்டனை சட்டம்! - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சியை கைவிடும் இந்தியா கூட்டணி.. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு..!

மனைவியை விவாகரத்து செய்தது முட்டாள்தனமான முடிவு: பில்கேட்ஸ்

120 நாட்கள் நீருக்குள் வாழ்ந்த ‘கடல் ராசா நான்’! ஜெர்மனி முதியவர் கின்னஸ் சாதனை!

அமெரிக்காவில் இருந்து 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றம்? பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பில் என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments