Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரோவிற்கு 2014ம் ஆண்டின் அமைதிக்கான காந்தி விருது

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (05:50 IST)
2014ம் ஆண்டின் அமைதிக்கான காந்தி விருது இஸ்ரோவிற்கு டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் வழங்கப்பட்டது.
 
விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி சேவைகளில் இந்தியாவின் புகழை உலக அளவில் இஸ்ரோ கொண்டு சென்றது.
 

 
இதனால், இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவைப் பாராட்டி கடந்த ஆண்டிற்கான அமைதிக்கான காந்தி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து, இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில்,
அமைதிக்கான காந்தி விருதை, இஸ்ரோ தலைவர் கிரண்குமாரிடம்,  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்த விருதோடு, ஒரு கோடி ரூபாய் ரொக்கத்தையும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
 
இந்த விழாவில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பாஜக மூத்த தலைவைர் எல்.கே.அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர். 
 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments