Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறியதா?

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (14:05 IST)
கேரளாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறவில்லை என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல். 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்தியாவில் 23 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்புகள் 1,700 ஆக பதிவாகியுள்ளன. ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 639 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 510, டெல்லியில் 351, கேரளாவில் 156, குஜராத்தில் 136, தமிழ்நாட்டில் 121 மற்றும் ராஜஸ்தானில் 120 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொறு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் கேரளாவில் 152 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 50 பேர் ஒமிக்ரான் அதிகம் பரவிய நாடுகளில் இருந்து திரும்பியவர்கள், 84 பேர் ஒமிக்ரான் குறைந்த அளவில் பரவிய நாடுகளில் இருந்து திரும்பியவர்கள். 18 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தற்போது நிலைமை மோசமடையவில்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடலூர் அருகே கடலில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்பு! களத்தில் இறங்கிய ஹெலிகாப்டர்..!

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. சில தேர்வுகளும் ரத்து..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் தொடர்ந்து குறைவு: எப்போது கரையை கடக்கும்?

இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

அடுத்த கட்டுரையில்
Show comments