Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஆர்சிடிசி வலைதளம் திடீர் முடக்கம்: தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாமல் அவதி..!

Mahendran
வியாழன், 26 டிசம்பர் 2024 (12:50 IST)
ரயிலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி வலைதளம் திடீரென முடங்கியதால், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐஆர்சிடிசி வலைதளம் திடீரென முடங்கியதாகவும், அந்த தளத்தை பயன்படுத்த முயன்ற பயணிகளுக்கு "பராமரிப்பு பணி காரணமாக சேவை பெற முடியாது. மீண்டும் முயற்சிக்கவும்" என்ற மெசேஜ் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பராமரிப்பு பணி குறித்து ஐஆர்சிடிசி தரப்பில் எந்த அப்டேட்டும் இதுவரை பயணிகளுக்கு வழங்கப்படவில்லை.

ஐஆர்சிடிசி சமூக வலைதள பக்கத்திலும் இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயணிகள் தங்கள் டிக்கெட் சார்ந்த சந்தேகங்களுக்கு 14646, 080-44647999, 080-35734999 ஆகிய கஸ்டமர் கேர் எண்கள் அல்லது etickets@irctc.co.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதை அடுத்து, டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுக்க பயணிகள் குவிந்து வருவதாக தெரிகிறது. மேலும், வலைதளம் மட்டும் இன்றி மொபைல் செயலியையும் பயன்படுத்த முடியவில்லை என்று பயணிகள் குற்றம் கூறி வருகின்றனர். இது குறித்து விரைவில் ஐஆர்சிடிசி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஆண்டில் 8.30 கோடி ப்ளேட் பிரியாணி விற்பனை! 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்! பிரியாணி இவ்வளவு விரும்பப்படுவது ஏன்?

சொர்க்க வாசல் தரிசன டிக்கெட் கிடைக்கவில்லை.. திருப்பதி தேவஸ்தானம் அறிவித்த மாற்று ஏற்பாடு..!

நடு காட்டில் பிரசவம்.. ஜீப்பை வழிமறித்த காட்டு யானை.. கணவருடன் சிக்கிய கர்ப்பிணி பெண்..!

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? அண்ணா பல்கலை விவகாரம் குறித்து ஈபிஎஸ்

சென்னை புத்தகக் கண்காட்சி: நாளை தொடங்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments