ஒருவரே அடிக்கடி வங்கியில் பணம் எடுப்பதை தவிர்க்க, இனி வங்கி கவுண்டர்களில் பணம் எடுக்க வருபவர்களின் கையில் மை வைக்கப்படும் என மத்திய நிதித் துறை அறிவித்துள்ளது.
டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மத்திய நிதித்துறை செயலர் சக்தி காந்த தாஸ், வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும் அதிக நபர்கள் வரிசையில் காத்திருக்க முக்கிய காரணம் ஒரே நபர்கள் மீண்டும் வெவ்வேறு வங்கிகளுக்கும், ஏ.டி.எம்களுக்கும் வருவதுதான்.
மேலும் பலர் தங்களிடமிருந்த கருப்புப் பணத்தை, பலரிடம் கொடுத்து வங்கிகள் மூலம் வெள்ளைப் பணமாக மாற்ற முயற்சி எடுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், இனி வங்கிகளின் கவுண்டர்களில் பணம் பெற வருபவர்களின் கைகளில், தேர்தலில் செயல்படுத்தப்படுவது போல கைவிரலில் மை வைக்கப்படும் என தெரிவித்தார்.