Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இந்தியர்: சிறையில் அடி உதை

காதலியை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இந்தியர்: சிறையில் அடி உதை

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (12:21 IST)
காதலியை சந்திப்பதற்கு பாகிஸ்தான் சென்ற இந்தியர், பொஷாவர் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்த கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார்.



 
மும்பையை சேர்ந்த ஹமீது நெகால் அன்சாரி என்பவர் சமூக வலைதளம் மூலம் பாகிஸ்தான் பெண்ணுடன் காதல் வசப்பட்டுள்ளார். அந்த பெண்ணை சந்திக்க 2012ஆம் ஆண்டு சட்டவிரோதமாக ஆப்காஸ்தானில் இருந்து பாகிஸ்தான் சென்றுள்ளார்.
 
அங்கு அவர் கைது செய்யப்பட்டு பொஷாவர் சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் நாட்டு போலி அடையாள அட்டை வைத்திருந்ததால் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
சிறையில் அன்சாரி உள்ளூர் கைதிகளால் மூன்று முறை கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இச்செய்தி அந்நாட்டு ஊடகங்கள் மூலம் வெளியாகின. இந்தகவல் மிகவும் கவலை அளிப்பதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
 
மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்சாரியை சந்தித்து, அவரது நிலவரம் குறித்து தகவல் அளிக்குமாறு பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் உயர் ஆணையரை கேட்டுக் கொண்டுள்ளதாக சுஷ்மா, அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட அமெரிக்கா..!

2025-2026-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? தொடக்க கல்வி இயக்குநர் தகவல்..!

இந்தியாவில் வெளியானது Realme P3 Pro மற்றும் Realme P3x 5G! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. 21 மில்லியன் டாலர் ஏன் கொடுக்க வேண்டும்: டிரம்ப்

கும்பமேளா நீட்டிக்கப்படாது: பிரயாக்ராஜ் கலெக்டர் திட்டவட்ட அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments