Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி! – மத்திய அரசு உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 3 ஜனவரி 2021 (11:23 IST)
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் உள்ள நிலையில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில் அந்த நிறுவனங்கள் அவசர கால மருந்தாக தங்கள் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் கோரின. அதை தொடர்ந்து அந்த இரண்டு தடுப்பூசிகளையும் ஆய்வு செய்த மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு துறை பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது.

மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு துறையின் பரிந்துரையை ஏற்று இந்தியாவில் அவசர கால பயன்பாட்டில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

6 மணி நேரத்தில் உருவாகும் ஃபெங்கல் புயல்.. மணிக்கு 13 கிமீ வேகம்! இன்றும் ரெட் அலெர்ட்!

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments