Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீஸ் - வருமான வரி இலாகா நடவடிக்கை

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2016 (09:16 IST)
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதற்கு பதில் புதிய நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். 


 

 
அதனையடுத்து, 9ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தங்களின் வங்கி கணக்கில் செலுத்த ஆரம்பித்தனர். 
 
முக்கியமாக, இந்தியா முழுவதும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியில்தான் மிக அதிகமானோர் தங்களின் கணக்குகளை வைத்துள்ளனர். அந்த நிலையில் அந்நிலையில் கடந்த 8 நாட்களில் மட்டும் ரூ.1.26 லட்சம் கோடி டெபாசிட்டை பெற்றுள்ளது எஸ்.பி.ஐ.
 
இந்நிலையில், நவம்பர் 10 முதல் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் டெபாசிட் செய்யப்படும் பணம் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அதில் 2.5 லட்சத்திற்கு மேல் பணப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டிருக்கும் வங்கி கணக்குகளை மட்டும் எடுக்கப்பட்டு, கணக்கு வைத்திருப்பவர்களின் வருமானத்தோடு ஒப்பிடப்படும். அது கருப்புப் பணமாக இருந்தால், அவர்களிடம், வருமான வரியுடன் சேர்த்து 200 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும் என வருமான வரித்துறையினர் கூறியிருந்தனர்.
 
தற்போது அந்த பணியை வருமான வரி இலாகா தொடங்கிவிட்டதாக தெரிகிறது. அதாவது, வங்கி கணக்குகளில் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் செலுத்தியவர்களுக்கு, வருமான வரிச்சட்டம் 133(6)-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும். 
 
இச்சட்டத்தின் மூலம் ஒருவரிடம் தகவலை பெற வருமான வரித் துறையினர் நேரில் அழைத்து விசாரணை நடத்த முடியும். நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வசிக்கும் பலருக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எந்த தேதியில்,எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டது, அதற்கான ஆதாரங்கள் மற்றும் புத்தக கணக்குகள் ஆகியவை குறித்து தகவல் அளிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
 
சரியான ஆதரம் இல்லாதவர்கள், விளக்கம் கொடுக்க முடியாதவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது. அதேபோல், 8ம் தேதிக்கு பின், திடீரென அதிக அளவில் தங்களது வங்கிக் கணக்குகளில் பனம் செலுத்தியவர்களையும் வருமானத் துறையினர் மோப்பம் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். 
 
அதேபோல், வருமான வரி கட்டு வருபவர் என்றால் கடந்த 2 ஆண்டுகளில் வருமான வரி இலாகாவிடம் அவர் சமர்பித்த வருமான வரி கணக்கு தாக்கல் நகல்களை சமர்பிக்க வேண்டும் எனவும் நோட்டிசில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, கருப்பு பணத்தை தங்களது வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்தவர்கள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments