Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செக்ஸ் தவிர்த்தால் 100 வருடங்கள் வாழலாம் : 120 வயது தாத்தா அறிவுரை

செக்ஸ் தவிர்த்தால் 100 வருடங்கள் வாழலாம்

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2016 (10:59 IST)
இந்தியாவில் 120 வயதான தாத்தா வாழ்ந்து வருகிறார் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?


 

 
கொல்கத்தாவில் வசித்து வருபவர் சுவாமி சிவானந்தா. இவருக்கு 120 வயது ஆகிவிட்டதாகவும், இவர் 1896ம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி பிறந்ததாகவும் கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் அவர் பாஸ்போர்ட்டும் வைத்துள்ளார். அதிலும் அவர் பிறந்தது அந்த வருடம்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இவர் கட்ட பிரம்மச்சாரி. யோகா குருவும் கூட. ஏராளமான பேருக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்கிறார். இந்த வயதிலும் சுறு சுறுப்பாக எல்லா வேலையும் செய்கிறார். 


 

 
அவரின் இளமை ரகசியத்தை பற்றி கேட்டால் அவர் மூன்று டிப்ஸ் கொடுக்கிறார். ஒன்று, நம் வாழ்வில் செக்ஸ் என்பதையே வைத்துக் கொள்ளக் கூடாதாம், அடுத்து, நம் உண்ணும் உணவில் மசாலா பொருட்களை அறவே ஒதுக்கி விட வேண்டுமாம். அடுத்து, கண்டிப்பாக தினமும் யோகா பயிற்சி செய்ய வேண்டுமாம்.
 
இதையெல்லாம் நாம் கண்டிப்பாக கடைபிடித்தால் 100 வயது வரை வாழலாம் என்று அவர் அறிவுரை கூறுகிறார்.  நமக்கு கூறுவதோடு அல்லாமல், அவர் அதை அவர் வாழ்விலும் கடைபிடித்து வருகிறார்.
 
வேக வைத்த சாப்பாடு, அரிசி, வேக வைத்த பருப்பு, கொஞ்சம் பச்சை மிளகாய் என அவரின் உணவு பழக்கம் மிகவும் எளிமையாக இருக்கிறது. பால், பழங்களை அவர் உண்ணுவதில்லை. 


 

 
மூன்று நூற்றாண்டுகளை கண்ட இவர் தனக்கு சில குறைகள் இருப்பதாகவும் கூறுகிறார். அவர் கூறும் போது “ நான் வாழ்ந்த காலத்தில்தான் மின்சாரம், கார்கள் மற்றும் தொலைபேசி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதெல்லாம் கிடைத்ததை வைத்துக் கொண்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். ஆனால், இப்போது யாரும் மகிழ்ச்சியாக இல்லை. நிம்மதியாக வாழவில்லை. ஆரோக்கியம் இல்லை. மரியாதை இல்லை. இது எனக்கு வேதனையை தருகிறது” என்று கவலைப்படுகிறார் சிவானந்தா.


 

 
உலகத்தில் வசிப்பவர்களில் இவர்தான் அதிக வயதுள்ளவர் என்று கூறப்படுகிறது. ஜப்பானில் வாழ்ந்த ஜிரொமென் கிமுரா என்பர் 116 வருடம், 54 நாட்கள் வாழ்ந்தார். ஆனால், சிவானந்தாவோ 120 வயதை தாண்டி வாழ்ந்து வருகிறார். இவரை பற்றிய தகவல்களை கின்னஸுக்கும் அனுப்பப்பட உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்