Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா இந்து நாடாக வளரும் என நம்புகிறேன் - கோவா அமைச்சர்

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2014 (13:29 IST)
நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா இந்து நாடாக வளர்ச்சி பெறும் என நம்பிக்கை உள்ளதென தெரிவித்து கோவா அமைச்சர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 
 
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நரேந்திர மோடியை வாழ்த்தி கோவா சட்டசபையில் பாராட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய கோவா அமைச்சர் தீபக் தவ்லிகர், நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா  இந்து நாடாக வளர்ச்சி பெறும் என நம்பிக்கை உள்ளது. பிரதமர் இது சம்பந்தமாக பணிபுரிவார் என நான் உணர்கிறேன். நாம் அனைவரும் அவரை ஆதரித்தால் இது நிச்சயம் நிறைவேறும் எனப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். 
 
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தீபக் தவ்லிகரின் கருத்து குறித்து கோவா முதலமைச்சர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் வற்புறுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக காங்கிரஸ் செய்திதொடர்பாளர் துர்காதாஸ் காமத் தெரிவிக்கையில், இது பாஜகவின் மறைக்கப்பட்ட திட்டத்தை காட்டுகிறது. கோவா முதலமைச்சர் இந்த கருத்திற்கு ஆதரவு அளிக்கிறாரா என்பதைத்   தெளிவுப்படுத்தவேண்டும். எப்போதும் டிவிட்டரில் கருத்து தெரிவிக்கும் மோடி இது குறித்து பதிலளிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 
 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments