Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக அரசு அராஜகம் - ஃபேஸ்புக்கில் நேருவை புகழ்ந்த ஆட்சியர் இடமாற்றம்

பாஜக அரசு அராஜகம் - ஃபேஸ்புக்கில் நேருவை புகழ்ந்த ஆட்சியர் இடமாற்றம்
, சனி, 28 மே 2016 (09:33 IST)
மத்தியப் பிரதேசத்தில் ஃபேஸ்புக்கில் நேருவை புகழ்ந்த அதிகாரியை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

 
மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர், அஜய்சிங் காங்வார். இவர், மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அண்மையில் முகநூலில் மறைமுகமாக புகழ்ந்து எழுதி இருந்தார்.
 
அதில், ’ஜவஹர்லால் நேரு என்ன தவறு செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. 1947-ல் நாடு சுதந்திரம் பெற்றபோது நம்மை, இந்து தலிபான் அரசாக மாறாமல் தடுத்தது அவர் செய்த தவறா? ஐ.ஐ.டி, இஸ்ரோ, ஐ.ஐ.எம், பெல், பார்க், ஐ.ஐ.எஸ்.பி. போன்ற நிறுவனங்களை உருவாக்கியது, அணைகள் கட்டியது, நீர்மின் திட்டங்கள் தீட்டியது அவர் செய்த தவறா? விக்ரம்சாராபாய், ஹோமி ஜெகாங்கிர் போன்ற சிந்தனை யாளர்களை கவுரவித்தது தவறா?’ என்று கூறியிருந்தார்.
 
அவருடைய இந்த கருத்து மற்ற சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவியது. இந்த நிலையில் வியாழன் இரவு அஜய்சிங் காங்வாரை மாவட்ட ஆட்சியர் பதவியில் இருந்து அதிரடியாக மாற்றிய மத்தியப் பிரதேச மாநில பாஜக அரசு அவரை போபாலில் உள்ள மாநில தலைமைச் செயலக துணை செயலாளராக நியமித்தது.
 
பேஸ்புக்கில் அதிவேகமாக தனது பதிவு பரவியதையடுத்து, அஜய்சிங், பதிவை நீக்கினார். அரசு அதிகாரிகள் அரசியல் ஈடுபாடு கொண்ட கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கூடாது என்ற அடிப்படை விதியை மீறியதால், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளும் பாஜக அரசு தெரிவித்துள்ளது.
 
இதற்கிடையே நேருவுக்கு எதிராக பாஜக அரசு தனது சகிப்பின்மையை நிரூபித்துள்ளது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வழக்கறிஞர்கள் போராடினால் 'தகுதி பறிப்பு’ - சென்னை உயர்நீதிமன்றம்