Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு எதிராக கருத்து! – ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக நோட்டீஸ்!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (08:27 IST)
மத்திய பிரதேசத்தில் காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தி திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. கடந்த 11ம் தேதி வெளியான இந்த படத்தில் பல்லவி ஜோஷி மற்றும் பலர் நடித்துள்ளனர். காஷ்மீரிலிருந்து இந்து பண்டிட்டுகள் வெளியேறியதன் பின்னணி குறித்து வெளியாகியுள்ள இந்த படத்தை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

அதேசமயம் இந்த படம் குறித்து எதிர் விமர்சனங்களும் பல இருந்து வருகின்றன. சமீபத்தில் இந்த படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கான் “இந்தியாவில் பல மாநிலங்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதை திரைப்படமாக எடுக்க வேண்டும். இந்த சிறுபான்மை சமூகம் பூச்சிகள் அல்ல அவர்களும் நாட்டின் குடிமக்கள்” என கூறியுள்ளார். அவரது இந்த கருத்து அரசு அதிகாரிகளுக்கான வரம்பை மீறியுள்ளதாக கூறியுள்ள மாநில உள்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments