Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மணிக்கு மேல தான் பட்டாசு வெடிப்பேன்: பாஜக எம்.பி தடாலடி

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (13:48 IST)
உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற முடியாது எனவும் 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன் எனவும் பாஜக எம்.பி தடாலடியாக தெரிவித்துள்ளார்.
 
தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை  மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய பிரதேச உஜ்ஜைனி தொகுதியின் பாஜக எம்.பி சிந்தாமணி மாளவியா காலம்காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியத்தில் உச்சநீதிமன்றம் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தீபாவளியன்று இரவு 10 மணிக்கு லட்சுமி பூஜை முடிந்த பிறகே பட்டாசுகள் வெடிப்பேன். தற்பொழுது 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 
என் மத நம்பிக்கைகளில் யார் தலையிட்டாலும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நான் வழக்கம்போல் 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன். என் மீது நடவடிக்கை பாய்ந்தாலும் பரவாயில்லை என அவர் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments