Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை இழந்த அதிர்ச்சியில் தூக்கில் தொங்கிய பெண் சாப்ட்வேர் எஞ்சினியர்!

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (23:13 IST)
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் வேலை இழந்த அதிர்ச்சியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
ஹைதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் ஜூனியர் தகவல் தொழில்நுட்ப வல்லுனராக ஹரிணி என்னும் பெண் வேலை பார்த்து வந்தார். இவரை சமீபத்தில் அழைத்த அவருடைய மேலாளர் இந்த மாதத்துடன் உனது வேலை பறிக்கப்படுவதாகவும், வேறு நிறுவனத்தில் நீ வேலை தேடிக்கொள் என்று கூறியதாகவும் தெரிகிறது 
 
இதனையடுத்து மனமுடைந்த ஹரினி,  தான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து யாரிடமும் பேசாமல் சாப்பிட்டால் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த மாதம் 30ஆம் தேதியுடன் வேலை போய்விடும் என்றும், இன்னும் பத்து நாள் மட்டுமே வேலை இருக்கும் என்று புலம்பிக் கொண்டிருந்த ஹரிணி, ஒரு கட்டத்தில் மனம் உடைந்து தூக்கில் தொங்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹர்ணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments