Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவர் கொடுமைப்படுத்துவதாக பிரபல நடிகை ரதி அக்னிகோத்ரி புகார்

Webdunia
திங்கள், 16 மார்ச் 2015 (09:42 IST)
பிரபல இந்தி நடிகை ரதி அக்னிகோத்ரி தனது கணவர் அனில் விர்வானி, தன்னை கொடுமைப்படுத்துவதாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
 
தமிழில் ரஜினிக்கு ஜோடியாக, முரட்டுக்காளை படத்தில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை ரதி அக்னிகோத்ரி.
 
மும்பை ஒர்லியில் குடும்பத்தினருடன் வசித்து வரும் ரதிக்கு தற்போது 54 வயது. அவரது கணவர் அனில் விர்வானி தொழிலதிபர் ஆவார். இவர்களுக்கு 28 வயதில் தனுஜ் என்ற மகன் உள்ளார்.
 
இந்நிலையில் ரதி அக்னிகோத்ரி நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகர்கள் சிலருடன் ஒர்லி காவல்நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தார்.
 
அந்த புகாரில், "எனது கணவர் அனில் விர்வானி கடந்த சில நாட்களாக என்னிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன், என்னை ஆபாசமாக திட்டுகிறார். இதை தட்டிக் கேட்டால் என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார். மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
 
இந்த புகாரின் பேரில், காவல்துறையினர் அனில் விர்வானி மீது குடும்ப வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இது குறித்து காவல்துறை துணை ஆணையர் கூறுகையில், "கணவர் அனில் விர்வானி கொடுமைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட எந்த காரணத்தையும் ரதி அக்னிகோத்ரி புகாரில் தெரிவிக்கவில்லை.
 
அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

Show comments