Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சட்லஜ் ஆற்றுப் பாறையில் மனித மூளையின் பாகங்கள்.. டி.என்.ஏ ஆய்வு முடிவு எப்போது?

சட்லஜ் ஆற்றுப் பாறையில் மனித மூளையின் பாகங்கள்.. டி.என்.ஏ ஆய்வு  முடிவு எப்போது?

Siva

, ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (08:10 IST)
சட்லஜ் ஆற்றுப் பாறையில் இருந்த மனித மூளையின் பாகங்கள் யாருடையது என்று இன்று ஆய்வு செய்ய கொடுக்கப்பட்ட நிலையில் அதன் முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் பாறை இடுக்குகளில் கிடைத்த மனிதமூளையின் பாகங்கள்  சைதை துரைசாமியின் மகன் வெற்றியுடையதா என்பது குறித்த டி.என்.ஏ ஆய்வு  முடிவு இன்று வெளியாகிறது
 
முன்னதாக சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைச்சாமி கடந்த சில நாட்களுக்கு முன் இமாச்சல பிரதேசத்தில் நண்பர்களுடன் சென்ற கார் ஆற்றில் விழுந்த நிலையில் அவரை தேடும் பணி  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய செல்போன் கிடைத்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் அதன்பின் மனித மூளையின் சில பாகங்கள் கிடைத்ததாகவும் செய்தி வெளியானது
 
இந்த விபத்தில் கார் டிரைவர் உயிரிழந்த நிலையில் அவரது நண்பர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் வெற்றி துரைசாமியை காணவில்லை என்பதால் அவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
வெற்றி துரைசாமியை தேடும் பணி தொடர்ந்து வருவதாகவும் விபத்து நடந்த இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் சுற்றளவில் தேர்தல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் மீட்க குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து.. என்ன காரணம்?