Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர் விப்ஜியார் பள்ளி சம்பவம் - ஐ.எஸ்.சி.இ. குழுவுக்கு மனிதவள அமைச்சகம் கடிதம்

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2014 (12:47 IST)
பெங்களூரில் உள்ள விப்ஜியார் (VIBGYOR) உயர்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்து மத்திய மனிதவள அமைச்சகம், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக் குழுவிற்குக் (சி.ஐ.எஸ்.சி.இ. - Council of Indian School Certificate Examination - CISCE) கடிதம் எழுதி உள்ளது. விப்ஜியார் பள்ளி, இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக் குழவிற்குக் கீழ் இயங்கி வருகிறது. 
 
அனைத்து வகை கல்வி முறை உள்ள பள்ளியிலும், குழந்தைகளின் பாதுகாப்பு ஒரு முக்கிய அம்சம் என்று அமைச்சகம் கருதுகிறது. சி.ஐ.எஸ்.சி.இ.-இன் (CISCE) கீழ் இயங்கி வரும் வேறு சில பள்ளிகளில் இருந்தும் அறிக்கை வந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள், அமைச்சகத்துக்கு வருத்தம் அளிக்கிறது. குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி சட்டம் குறித்த விரிவான சுற்றறிக்கையை அமைச்சகம் 26 மார்ச் 2014 அன்று வெளியிட்டது. 
 
பெங்களூரு சம்பவத்தை ஆய்வு செய்து உடனடியாக, விரிவான அறிக்கையை அளிக்குமாறு சி.ஐ.எஸ்.சி.இ.-யை (CISCE) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. விப்ஜியார் உயர்நிலைப் பள்ளியின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெற, கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளதை அமைச்சகம் சுட்டிக் காட்டி உள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

Show comments