Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் பிரதமருக்கு மோடி பிரியாணி பரிமாறுவார் - சசிதரூர் கிண்டல்

Webdunia
வெள்ளி, 23 மே 2014 (11:30 IST)
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வந்தால், அவருக்கு நரேந்திர மோடி கோழி பிரியாணி பரிமாறுவார் என்று நம்பலாம் என்று காங்கிரஸ் தலைவர் சசிதரூர் கிண்டலாக கூறியுள்ளார்.
 
கடந்த மார்ச் மாத இறுதியில், பாக்பத் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, "கடந்த 2013ஆம் ஆண்டுல இந்திய- பாகிஸ்தான் எல்லையில் இண்டு இந்திய ராணுவ வீரர்கள் தலை துண்டித்துக் கொல்லப்பட்டனர்.
 
பாகிஸ்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இந்தியாவுக்கு தனிப்பட்ட முறையில் வந்த பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் அஷ்ரபுக்கு காங்கிரஸ் அரசாங்கம் கோழி பிரியாணி வழங்கி விருந்தளித்துக் கொண்டிருக்கிறது” எனக் குற்றஞ்சாற்றி பேசினார்.
 
இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது குறித்து,
சசிதரூர் தனது ட்விட்டர் சமூக இணையதளத்தில், நவாஸூக்கு மோடி பிரியாணி பரிமாறுவார் என நம்பலாம் என கூறியுள்ளார்.
 
மேலும், மோடியின் சமரச நோக்குடைய உரையால் தான் மிகவும் கவரப்பட்டதாகவும் தரூர் ட்விட்டரில் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'நான் அமைதியான பிரதமர் இல்லை, ஊடகங்களிடம் பேச பயந்தது இல்லை' - மன்மோகன் சிங் வாழ்க்கை எப்படி இருந்தது?

பீகாரில் மாறுகிறதா அரசியல் நிலவரம்? நிதிஷ்குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி?

கரும்பு டன்னுக்கு ரூ.950 குறைப்பு.. வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா? - பாமக ராமதாஸ் காட்டம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2: கணினி வழி தேர்வு ரத்து: ஓ.எம்.ஆர் முறையில் தேர்வு நடத்த திட்டம்..!

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை: தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை..!

Show comments