Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர்

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (14:48 IST)
ஆக்ராவில் நடைப்பெற்ற மாநாட்டில் இந்து தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.


 


 
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். மோகன் பகவத் பேசியதாவது:-
 
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதில்லை.
 
இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. எனவே நீங்களும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் அப்போது தான் நமது கலாச்சாராத்தை நம்மால் காப்பாற்ற முடியும்.
 
இந்துத்துவா காப்பாற்றப்பட்டால் தான் நாம் நமது நாட்டை காப்பாற்ற முடியும். பாரதம் என்பதும் இந்துத்துவா என்பதும் ஒன்று தான். நமது இந்து கலாச்சாரம் உயர்ந்தது. இதற்கு எந்த பங்கமும் ஏற்பட நாம் அனுமதிக்க கூடாது.
 
இப்போது கல்வித்துறையில் மாற்றம் வேண்டும் என்கிறோம். அதற்கு முன்னதாக நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நமது எண்ணங்கள் மாறினால் எல்லா செயல்களும் நல்லவையாக நடக்கும்.
 
இவ்வாறு அவர் பேசினார். 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments