Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (15:33 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் முதல்வர் உள்பட பல விஐபிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
 
ஏற்கனவே ஹரியானா மாநில துணை முதல்வர், உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர், அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வர், கர்நாடக மாநில துணை முதல்வர் ஆகியோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என செய்திகள் வெளியானது.
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இமாச்சல பிரதேச மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இவருக்கு கடந்த சில நாட்களாக அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து அவர் தன்னைதானே தனிமை பறித்துக்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments