Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பாஜக எம்பி நடிகை ஹேமமாலினி (படங்களுடன்)

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2015 (17:40 IST)
பிரபல ஹிந்தி நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமமாலினி சென்ற கார் நேற்று இரவு ஜெய்ப்பூருக்கு அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹேமமாலினி படுகாயம் அடைந்தார். மேலும், இந்த விபத்தில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
 

 
பிரபல ஹிந்தி நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமமாலினி, நேற்றிரவு தனது தொகுதியான மதுராவில் இருந்து ஜெய்ப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வந்த மெர்சிடஸ் பென்ஸ் கார், இரவு 8.50 மணியளவில் ஜெய்ப்பூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள தெளஸா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி, எதிரே வந்த ஆல்டோ கார் மீது பயங்கரமாக மோதி இருக்கிறது.
 

 
இந்த விபத்தில், ஹேமமாலினியின் நெற்றி மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி இருக்கிறது. இதை தொடர்ந்து அவர் உடனடியாக ஜெய்ப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

 
மேலும், ஆல்டோ காரில் வந்த 4 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகியுள்ளது. மேலும், அந்த காரில் பயணித்த 4 பேரும் படுகாயத்துடன் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
 
மேலும் படங்கள் அடுத்த பக்கம்..





கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments