Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகரின் குடும்பத்தில் இரண்டு பாஜக வேட்பாளர்கள்!

Webdunia
ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (08:32 IST)
பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மனைவி ஹேமாமாலினி ஏற்கனவே பாஜக வேட்பாளராக போட்டியிடும் நிலையில் தற்போது அவருடைய மகனும் பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
 
நடிகர் தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஹேமாமாலினி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்காக சமீபத்தில் தர்மேந்திரா தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகனும் நடிகருமான சன்னிதியோல், சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனையடுத்து அவர் அமிர்தசரஸ் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
ஒரே குடும்பத்தில் உள்ள இருவருக்கு பாஜக சீட் கொடுக்கவிருப்பது அக்கட்சியினர்களிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments