Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை: தற்கொலை என சிபிஐ அறிவிப்பு

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2014 (12:29 IST)
உத்திரப்பிரதேசத்தில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில், தற்கொலை என சிபிஐ அறிவித்துள்ளது.
 

 
உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பதான் மாவட்டத்தில், கடந்த மே மாதம் 2 சிறுமிகள் ஒரே மரத்தில் தூக்கில் பிணமாகத் தொங்கினர். இது தொடர்பாக காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், மாநில காவல் துறை துணை ஆய்வாளர் தலைமையில் 20 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு, சம்பவம் நடந்த பகுதியில் விசாரணை நடத்தியது. மேலும், இவ்வழக்கில் தொடர்பிருப்பதாகக் கைது செய்யப்பட்ட இரண்டு காவலர்கள் உட்பட 5 பேரிடம் விசாரணை நடத்தி வந்தது.
 
இரு சிறுமிகளும் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரோடு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
 
ஆனால், இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்துள்ள சிபிஐ, இரண்டு சிறுமிகளும் கொல்லப்படவில்லை என்றும், அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
 
சிபிஐ அதிகாரிகளின் அறிக்கை, கிராம மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ்.. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்ததால் சிக்கல்..!