Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய அரசியல் கட்சி: குலாம் நபி ஆசாத் இன்று அறிவிக்க வாய்ப்பு?

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (11:23 IST)
காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய குலாம்நபி ஆசாத் இன்று புதிய கட்சியை ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
காங்கிரஸ் கட்சியின் பழம்பெரும் தலைவர் குலாம் நபி ஆசாத் என்பதும் இவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ராகுல் காந்தி குறித்து கடுமையாக விமர்சனம் செய்த குலாம்நபி ஆசாத் திடீரென கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பல மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாஜகவில் இணைய போவதில்லை என்று உறுதியுடன் கூறியிருந்த குலாம்நபி ஆசாத் இன்று தனது புதிய கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கட்சியின் கொள்கை குறித்தும் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் குலாம் நபி ஆசாத் அம்மாநிலத்தின் முதல்வராக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனமா? ராகுல் காந்தி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments