Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.6000 கோடி கருப்பு பணம் வைத்திருந்த வைர வியாபாரிக்கு 600 கோடியே மிஞ்சியது!

ரூ.6000 கோடி கருப்பு பணம் வைத்திருந்த வைர வியாபாரிக்கு 600 கோடியே மிஞ்சியது!

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (12:00 IST)
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கருப்பு பணம், கள்ளப்பணம் போன்றவற்றை ஒழிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் 500, 1000 ரூபாய் நோட்டுகளாகவே இருப்பதால் அவற்றை முடக்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.


 
 
பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டது. இதனால் அரசுக்கு வரி கட்டாமல், சரியாக கணக்கு காட்டாமல் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் சிக்கி வருகின்றனர்.
 
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த  வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் தன்னிடம் இருந்த கருப்பு பணம் ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
வருமானத்துக்கு அதிகமாக டெபாசிட் செய்பவர்களுக்கு வரியில் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டது. இதன்படி வைர வியாபாரி லால்ஜிபாய் ஒப்படைத்த 6000 கோடி ரூபாய்க்கு வரியாக ரூ.1800 கோடியும், 200 சதவீத அபராதமாக 3600 கோடியும் சேர்த்து மொத்தம் 5400 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
 
இதனால் லால்ஜிபாய்க்கு ரூ.600 கோடி மட்டுமே மிஞ்சியது. இவர் தானாக முன்வந்து கருப்பு பணத்தை அரசிடம் ஒப்படைத்தது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments