Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில்நுட்ப கோளாறால் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10 ஒத்திவைப்பு..

Arun Prasath
புதன், 4 மார்ச் 2020 (17:25 IST)
இஸ்ரோவால் நாளை விண்ணில் செலுத்துவதாக திட்டமிட்டருந்த, கண்காணிப்பு செய்ற்கைக்கோளை ஏந்தி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10  , தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதத்தில் 10 கண்காணிப்பு செய்றகைக்கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. அதன் படி பருவநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 2 அதிநவீன ஜியோ இமேஜிங் செயற்கை கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதன் முதல் கட்டமாக புவியை கண்காணிக்கவும், வானிலை ஆய்வுகளுக்காகவும் உதவும் வகையில் ஜி-சாட்-1 செயற்கைக்கோள், வருகிற மார்ச் 5 ஆம் தேதி, மாலை 5.43 மணிக்கு, ஜிஎஸ்எல்வி.-எஃப்10 ராக்கெட் மூலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்தது.

இந்நிலையில் தற்போது நாளை விண்ணில் செலுத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10 ராக்கெட், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments