Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை தொடர்ந்து தாக்கும் புதிய நோய்! – மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் மத்திய அரசு!

Webdunia
வியாழன், 13 மே 2021 (08:39 IST)
கொரோனாவிலிருந்து குணமாகும் நோயாளிகளுக்கு கறுப்பு பூஞ்சை நோய் என்ற நோய் பரவுவதால் அதற்கான மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்புகள் 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில் இந்தியாவில் மருத்துவமனை வசதிகள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றிற்கு பற்றாக்குறை எழுந்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோயிலிருந்து குணமாகும் நபர்களுக்கு கறுப்பு பூஞ்சை நோய் என்ற புதிய டநோய் தாக்குவது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு கொரோனா தொற்றின் தீவிரத்தை குறைப்பதற்காக அளிக்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த நோய் தூண்டபடலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இந்த நோயை தவிர்க்க ஆம்போடெரிசின்-பி என்ற மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மருந்தின் இருப்பை கணக்கிட்டு, உற்பத்தியை அதிகரித்து மாநிலங்கள் முழுவதும் சம அளவில் இம்மருந்து கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

முதலாளியுடன் மனைவியை உடலுறவுக்கு வற்புறுத்திய கணவன்.. மறுத்ததால் முத்தலாக்

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. 2026 தேர்தலுக்கு ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments