Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல சாலைகளால்தான் அதிக விபத்துக்கள்: துணைமுதல்வரின் சர்ச்சை பேச்சு

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (07:59 IST)
நல்ல சாலைகள் இருப்பதால் தான் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் வேகமாக செல்வதாகவும் இதனால்தான் அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் கோவிந்த் கர்ஜோல் தெரிவித்துள்ளார்.
 
 
சித்ரதுர்காவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் சுமார் 10 ஆயிரம் விபத்துகள் நேரிடுவதாகவும், மோசமான சாலைகள் தான் விபத்துகள் ஏற்பட காரணம் என்று மீடியாக்களில் செய்தி வெளிவந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் நல்ல சாலைகளில் தான் அதிக விபத்துகள் நிகழ்வதாகவும் தெரிவித்தார். 
 
 
நல்ல சாலைகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டி செல்வதால்,  அதிக விபத்துகள் நிகழ்வதாக குறிப்பிட்ட துணை முதலமைச்சர் கோவிந்த் கர்ஜோல் மோசமான சாலைகளால் பெரும்பாலும் விபத்துகள் நிகழ்வதில்லை என்றும் கூறினார்.
 
 
ஒரு மாநில அரசு நல்ல சாலைகளை மக்களுக்கு அமைத்து கொடுத்துவிட்டு அந்த சாலைகளில் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டுமே தவிர, ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு  துணை முதலமைச்சர் கோவிந்த் கர்ஜோல் இவ்வாறு பேசுவது அவரது பதவிக்கு உகந்தது அல்ல என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments