Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை இன்னும் கணிசமாக குறையும்: நகைக்கடைக்காரர்கள் கணிப்பு..!

Mahendran
செவ்வாய், 23 ஜூலை 2024 (19:58 IST)
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதிக்கான வரிகுறைப்பு காரணமாக இன்று ஒரு சவரனுக்கு 2000 ரூபாய்க்கும் அதிகமாக குறைந்து உள்ள நிலையில் நாளை முதல் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக நகைக்கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 
 
சென்னை நகைக்கடைக்காரர் ஒருவர் கருத்து தெரிவித்த போது ’ஒரே நாளில் 2000 ரூபாய் வரை குறைந்துள்ளது நல்ல விஷயம் என்றும், ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் தங்கம் எனி அனைவராலும் வாங்க கூடியது என்றும் தெரிவித்தார்.
 
இன்றே நிறைய பேர் கடைக்கு வந்து தங்கம் வாங்கி செல்வதாகவும் அவர் கூறினார். மேலும் நகை சிறுசேமிப்பு திட்டத்தில் கட்டியவர்களுக்கு பெரிய ஆதாயம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
சர்வதேச சந்தையை பொருத்து தங்கத்தின் விலை இந்தியாவில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் வரி குறைப்பால் தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த தாக்கம் இன்னும் சில நாட்கள் இருக்கும் என்றும் குறிப்பாக நாளை முதல் இன்னும் தங்கம் விலை இன்னும் குறைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments