Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமக் கொடூரம்: தந்தை, சகோதரன், மாமன் ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2015 (11:57 IST)
மேற்குவங்க மாநிலத்தில் பெற்ற தாயின் ஒத்துழைப்போடு, காமக் கொடூரர்களான  தந்தை, சகோதரன், மற்றும் மாமன் ஆகிய தன் குடும்பத்தினராலேயே 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
 
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள துப்கவுரி காவல் நிலையத்தில் 16 வயது சிறுமி ஒரு புகாரைக் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள அந்தப் புகாரில், தந்தை, சகோதரன், மற்றும் சகோதரன் என மூவரும் கடந்த 2 ஆண்டுகளாக தன்னை, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனால தான் 2 முறை கர்ப்பமடைந்து அதை கலைத்துவிட்டதாகவும், மன உளைச்சல் தாங்க முடியாமல் 4 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார்.
 
இவ்வாறு தான் துன்புறுத்தப்படுவது குறித்து, தன் தாயிடம் சொல்லி கதறி அழும் போத அந்த சிறுமியிட்ம், "அவர்கள் ஒன்றும் அந்நியர்கள் இல்லை, உன் உறவினர்கள்" என்று அந்தத் தாய் சமாதானம் சொல்லியதாக பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், சிலதினங்களுக்கு முன்னர் தனது பள்ளி ஆசிரியர் ஒருவரிடம், இந்த கொடூர சம்பவம் குறித்து, அந்த சிறுமி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த, ஆசிரியர்கள் அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
 
அங்கு அந்த சிறுமி கொடுத்த புகாரின் பேரில், அந்த 3 காமக் கொடூரர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த அந்தப் பெண்ணின் தாயார் தலைமறைவாகியுள்ளார். 
 
தாயின் ஒத்துழைப்போடு சிறுமியை, காமக் கொடூரர்களான தந்தையும் சகோதரனும் தாய்மாமனும் பாலியல் பலாத்காரம் செய்த இந்த கொடூர சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, சிறார் நல கமிட்டியிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?