Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை மானபங்கப்படுத்திய கஜினி நடிகர் கைது

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (14:58 IST)
தனது மனைவையை, காதலியின் வீட்டின் அருகே அடித்து, மானபங்கப்படுத்திய மும்பை நடிகர் காலித் சித்திக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.  


 

 
பாலிவுட் படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வருபவர் காலித் சித்திக்கி. இவர், இந்தியில் கஜினி படத்தில் ஆமீர்கானின் ஏர் வாய்ஸ் நிறுவனத்தின் மேனேஜராக நடித்தவர். இவரும் இவரது மனைவி ராஹத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள்.
 
மகனும், மகளும் காலித்துடன் இருக்கிறார்கள். அவரின் மனைவி ராஹத், இவரின் வீட்டின் அருகிலேயே வசிக்கிறார். வார இறுதி நாட்களில் தனது குழந்தைகளை பார்த்து செல்வார். இந்நிலையில் ராஹத், தனது கணவர் காலித் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
அந்த புகாரில் “என் மகன் என்னைப் பார்க்க வீட்டிற்கு போனபோது அவனுக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் அவன் திங்கட்கிழமை பள்ளிக்குச் செல்லவில்லை. நான் திங்கட்கிழமை குழந்தைகளை காலிதின் வீட்டில் விடச் சென்றபோது அவர் வீட்டில் இல்லை. அன்று இரவு அவரது கார் அவரின் காதலி வீட்டு வாசலில் நிற்பதை பார்த்தேன். அவருக்கு பல முறை போன் செய்தும் எடுக்கவில்லை. 
 
மகனுக்கு உடல்நலம் சரியில்லாதபோது காதலி வீட்டிலா என்ன செய்கிறீர்கள் என்று அவரின் காதலி வீட்டு வாசலில் நின்று சத்தம் போட்டேன். இதையடுத்து ஒரு மணிநேரம் கழித்து கோபத்தில் வெளியே வந்த காலித் எனது கழுத்தை நெறித்ததுடன், என்னை மானபங்கப்படுத்தினார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இதையடுத்து போலீசார் காலிதை கைது செய்து பின்னர் ஜாமீனில் வெளியே விட்டனர். 

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

Show comments