Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 அடி பேனர் வைத்து பிரபல வீரரை இந்திய கிரிக்கெட் அணிக்கு அழைக்கும் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (08:41 IST)
துலீப் கோப்பையைக்கான இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நொய்டா மைதானத்தில் தான் இந்த சப்மவம் நடந்துள்ளது. 

 
மைதானத்தில், 20 அடி பேனரில், இந்திய அணியின் முன்னணி தொடக்க வீரராக திகழ்ந்த கவுதம் காம்பீரை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று  அவரது ரசிகைகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
கவுதம் காம்பீர், கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த அவரை 2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டி வைத்தனர். அவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக முயற்சி செய்து வருகிறார். 


 
 
இந்நிலையில், மைதான கேலரில் கடும் வெயிலில் பேனரை வைத்துக்கொண்டு போட்டியை பார்த்த ரசிகைகளின் மீது காம்பீரின் பார்வை விழுந்தது. பின், அந்த ரசிகைகளுக்கு தண்ணீர் வழங்கும்படி மைதான ஊழியர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

விளையாட்டு விதியின்படி போட்டி நடக்கும்போது எந்த ரசிகர்களையும் வீரர்கள் பார்க்கக்கூடாது என்பதால், தனக்கு பேனர் வைத்த ரசிகர்களை காம்பீர் அப்போது சந்தித்து பேசவில்லை.
 
துலீப் கோப்பையைக்கான இறுதிப் போட்டியில் கவுதம் காம்பீர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப் எச்சரிக்கை எதிரொலி! இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

இந்திய தேர்தல் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்.. மன்னிப்பு கேட்டார் மெட்டா மார்க்..!

பொங்கல் பண்டிகையில் 454 கோடிக்கு மது விற்பனை.. பரபரப்பு தகவல்..!

பிரபல ரவுடி மீது காவல்துறை துப்பாக்கி சூடு.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு..

வேறு நாடாக இருந்தால் மோகன் பகவத் கைது செய்யப்பட்டிருப்பார்: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments