Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாத்மா காந்தி பேரனும் போட்டியிட மறுப்பு: போட்டியிட ஆள் கிடைக்காமல் திணறும் எதிர்க்கட்சிகள்

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (17:52 IST)
மகாத்மா காந்தி பேரனும் போட்டியிட மறுப்பு: போட்டியிட ஆள் கிடைக்காமல் திணறும் எதிர்க்கட்சிகள்
ஏற்கனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சரத்பவார் மற்றும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பரூக் அப்துல்லா ஆகிய இருவரும் போட்டியிட மறுத்து விட்டனர் 
 
இந்த நிலையில் மகாத்மா காந்தி பேரனும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக போட்டியிட மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி இடம் எதிர்க்கட்சிகள் அணுகினர்.
 
ஆனால் ஒருமித்த கருத்தை உருவாக்கும் ஒருவராக எதிர்க்கட்சி வேட்பாளர் இருக்க வேண்டும் என்று கூறிய மகாத்மா காந்தி பேரனும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிட மறுப்பு தெரிவித்துவிட்டார் 
 
இதனை அடுத்து எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட ஆள் கிடைக்காமல் திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments