Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி மாநகரப் பேருந்துகளில் இலவச வை-ஃபை வசதி; அரவிந்த் கெஜ்ரிவல் தகவல்

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2015 (05:08 IST)
டெல்லி மாநகரப் பேருந்துகளில் இலவச வை-ஃபை வசதியை விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
 

 
டெல்லி தல்கதோரா விளையாட்டு அரங்கில்,  சிறந்த 10 போக்குவரத்து கழக டெப்போக்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 
 
இந்த விழாவில் கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பயணிகள் வசதியை முன்னிட்டு, டெல்லியில் உள்ள பேருந்துகளில்  இலவச வை-ஃபை வசதியை விரைவில் அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்தார்.
 
இதற்காக, கூகுள், பேஸ்புக் மற்றும் எரிக்சன் போன்ற முக்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
 
இந்த விழாவில், டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய்,  டெல்லி போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சி.ஆர்.கார்க் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்புக்கு டெல்லி மாநகர மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments