Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக்கொலை.. பெரும் பரபரப்பு..!

Siva
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (07:03 IST)
மஹாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவரான பாபா சித்திக் நேற்று  இரவு மர்ம நபர்களால் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியூட்டியுள்ளது.
 
பாபா சித்திக், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் முக்கிய உறுப்பினராக இருந்தார். மும்பையில் உள்ள நிர்மல் நகர் பகுதியில், தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் அமரும்போது, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.
 
இந்த சம்பவத்தின் போது, மர்ம கும்பல் திடீரென பட்டாசுகளை வெடிக்கச் செய்து பாபா சித்திக்கின் மீது தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. பல குண்டுகள் அவரது வயிறு மற்றும் மார்பில் பாய்ந்தன, இதனால் அவர் மயங்கி சரிந்தார்.
 
அப்பகுதியினர் அவரை உடனே மீட்டு, லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், அங்கு சிகிச்சை பலனின்றி சித்திக் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments