Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோலார் பேனல் மோசடியில் திமுக முன்னாள் அமைச்சருக்கும் தொடர்பு: சரிதா நாயர் குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (16:12 IST)
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் தற்போது திமுக முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்திற்கும் தொடர்பு உள்ளதாக மோசடியில் ஈடுபட்ட பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கூறியுள்ளார்.


 
 
கேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் சிக்கிய சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் சரிதா நாயர் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. இதில், கோவையில் வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்து தருவதாக ஏமாற்றி விட்டதாக 2 நிறுவனங்கள் கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
 
இது தொடர்பான விசாரணை கோவை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஜராக இன்று நீதிமன்றத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
சோலார் பேனர் மோசடி குறித்து விசாரிக்க கேரள அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷன்  முன்பு அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன். இதுவரை 13 பேர் மீது மோசடி ஆதாரங்களை அளித்துள்ளேன். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட 9 பேர் மீது டிஜிட்டல் ஆதாரங்களை அளித்துள்ளேன். இந்த பட்டியலில் திமுகவை சேர்ந்த முன்னாள் நிதித்துறை இணை அமைச்சர்  பழனிமாணிக்கமும் உள்ளார் என சரிதா நாயர் கூறியுள்ளார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர பனிச்சரிவு.. ஐந்து பேர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..!

பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: நடிகை தமன்னா எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments