Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த நபரின் மகள் கற்பழிப்பு

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2016 (12:33 IST)
கருப்பு பண ஒழிப்பு தொடர்பாக, மக்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். 


 

 
மேலும், மக்கள் தங்கள் கையில் உள்ள ரூபாய் நோட்டுகளை, வங்கிகளுக்கு சென்று மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், எ.டி.எம் மையங்களில் அதிக பட்சம் ரூ.2000  எடுக்க  முடியும், அதேபோல் வங்கிகளில் ரூ.2,500 மட்டுமே எடுக்க முடியும்.
 
கூட்டல் நெரிசல் காரணமாக, இன்னும் பலர் தங்களிடம் உள்ள நோட்டுகளை மாற்றாமல் உள்ளனர். அவர்களுக்கு டிசம்பர் 30ம் தேதி வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விவகாரம் நாடுமுழுவதும் பல்வேறு வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரூபாய் நோட்டு பிரச்சனையால் ஒரு சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
 
உத்தரபிரதேசத்தில் பதாம் எனும் இடத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர், பசு மாட்டு வரட்டிகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த 21ம் தேதி, அவரிடம் வரட்டி வாங்க 3 பேர் வந்தனர். அப்போது, 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளனர். ஆனால், அவர் அதை வாங்க மறுத்துவிட்டார்.இதனால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது.
 
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மூவரும், அவரை பழிவாங்க முடிவு செய்தனர். 
 
இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது மனைவியுடன் வெளியே சென்றிருந்தார். வீட்டில் அவரது 15 வயது மகள் மட்டும் தனியாக இருந்தாள். அதை அறிந்த அவர்கள், அவரின் வீட்டிற்குள் புகுந்த அந்த சிறுமியை கடத்திச் சென்றனர்.
 
அவரின் வீட்டிற்கு அருகில் இருந்த வயல் வெளியில் வைத்து அந்த சிறுமியை கற்பழித்தனர். அதில் 2 பேர் பள்ளியில் 9வது படிக்கும் மாணவர்கள். 
 
வீடு திரும்பிய விவசாயி,தன் மகளுக்கு நேர்ந்த கொடுமை கண்டு கதறி அழுதார். அதன்பின் அந்த பகுதி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்த 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட 2 மாணவர்களை அவர்கள் தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்... ஒரே மாதத்தில் 2 முறை கொலை முயற்சி?

சென்னைக்கு ஒரு வாரம் மழை இல்லை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை..!

ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரி கைது.. சென்னை போலீசார் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments